×

ஒரே நாளில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம்

 

சேலம், மார்ச் 9: மாசி மாத முகூர்த்தத்தையொட்டி, சேலம் மாவட்ட கோயில்களில் ஏராளமான ஜோடிகளுக்கு நேற்று காலை திருமணம் நடந்தது.
மாசி மாத முகூர்த்தத்தையொட்டி, கோயில்களில் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி அதிகாலையிலேயே கோயில்களில் திருமண கோஷ்டியினர் குவிந்தனர். அர்ச்சகர் மந்திரங்கள் முழங்க திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. நேற்று மட்டும் சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள் கோயில்களில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், கோட்டை பெருமாள், தாரமங்கலம் கைலாநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், அம்மாப்பேட்டை செங்குந்தர் சுப்ரமணிய சுவாமி உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.

Tags : Salem ,Masi ,Salem district ,
× RELATED வெள்ளிப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி