விருதுநகர் : பிப்ரவரி 7ல் விருதுநகரில் தென்மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு அண்மையில் திருவண்ணாமலையில் டிச.14ல் நடைபெற்றது. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் அனைத்து திமுக பொறுப்பாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் கலைஞர் திடலில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என்றும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
