திருச்சி: திருச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி: பியூஸ் கோயலுடன் இருமுறை தேர்தல் தொடர்பான ஆலோசனையில் தான் ஈடுபட்டோம். தொகுதி பங்கீடு தற்போது பேசப்படவில்லை. தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இல்லை என்று கூறும் பொழுது நடத்துவீங்களா? என்ற கேள்வி தேவையில்லாதது. நாங்கள் இதுவரை அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனக்கு தெரிந்த வரை எங்கள் கூட்டணி கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுக சார்பில் அடுத்த கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடும் போது அறிவிப்போம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தவெக தலைவர் விஜய்யை சிபிஐ விசாரணைக்கு அழைத்து இருப்பது மறைமுக அழுத்தமா என்ற கேள்விக்கு? அனைவரும் மீதும் வழக்கு இருக்கிறது, என் மீதும் வழக்கு இருக்கிறது. அது தனிப்பட்ட விவகாரம் என்றார்.
