×

விஜய் வரணும்: டிடிவி ஆசை

திருச்சி பஞ்சப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைந்தால் சிறப்பு தான். எந்த ஒரு கூட்டணியும் வலுப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு கூட்டணியும், மேலும் கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது, யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். எங்க கூட்டணி இன்னும் பலப்பட வேண்டும் என்ற விருப்பத்தில் சொல்கிறேன், மற்ற விஷயங்களை இபிஎஸ்சும், பாஜவின் டெல்லி தலைவர்களும் பார்த்து கொள்வார்கள். எங்கள் விருப்பம், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான்.

அதேநேரத்தில் அதிமுக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று சொல்கிறேன். பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார்கள். போனமுறை ‘அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’ என்று சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : VIJAY VARANUM ,DTV ,Trichy Punjab ,Secretary General ,Ammuka ,T. D. V. DINAKARAN ,TAVEKA ,VIJAY ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,
× RELATED சொல்லிட்டாங்க…