×

சிலிண்டர் தட்டுப்பாடா? எடப்பாடிய மாத்துறாங்களா? எல்லாம் மோடிஜி பார்த்துப்பாரு: செல்லூர் ராஜூவின் விஸ்வாசம்

மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை மோடிஜி பார்த்துக் கொள்வார். மேலே இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார். அனைத்தும் அவருக்கு தெரியும். விஜய் அதிமுக கூட்டணிக்கு வர இருப்பதாக உள்ளதே என்கிறீர்கள். தோழமை என்பது தேர்தல் நேரத்தில்தான். கடைசி நிமிடத்தில் கூட கூட்டணிகள் மாறும். நாங்கள் தோழமையை மதிக்கக் கூடியவர்கள். பொதுவாக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவர்களை தோளில் போட்டு தூக்கி கொண்டாடுவோம்.

உச்சி முகர்ந்து பதவி கொடுப்போம். அதிமுக கூட்டணிக்கு நடிகர் விஜய்னு மட்டுமல்ல. யார் வந்தாலும் தலைமேல் தூக்கிக் கொண்டாடுவதே எங்கள் வழக்கம். விஜய் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு. அவர்கள் கட்சியிலிருந்து அவர்கள் தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளனர். அதுகுறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமாக விபரமாக சொல்லி விடுவார். ஏற்கனவே அவர் சொல்லி விட்டார். பாஜ தலைவர்களும் சொல்லி விட்டனர். இங்கு சீட்டுகள் அல்ல, எண்ணம்தான் பெரிது. இங்கு மனம்தான் பெரிது. யாரும் இவ்வளவு சீட்டு வேண்டுமென வம்பு பண்ணுவது இல்லை.
இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், ‘‘பீகாரில் நிதிஷ்குமாரை மாற்றியது போல, தமிழ்நாட்டிலும் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறதே’’ என கேட்டனர். அதற்கு அவர், ‘‘சரி பார்ப்போம்…’’ என்றபடி கிளம்பிச் சென்றார்.

Tags : Modiji ,Sellur Raju ,Former ,AIADMK ,minister ,Madurai ,Vijay ,
× RELATED சொல்லிட்டாங்க…