வாஷிங்டன்: சவுதியின் அல் இத்திகாத் அணியில் இணைய ரூ.13 ஆயிரம் கோடி வழங்க முன்வந்த நிலையில் தனது குடும்பத்திற்காக அந்த வாய்ப்பை மெஸ்ஸி நிராகரித்த தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. 2025 ஆம் ஆண்டில், மட்டும் 130 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ள மெஸ்ஸி, 2025 ஆம் ஆண்டில் அதிக சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்நிலையில், மெஸ்ஸி பல ஆயிரம் கோடி வருமான வாய்ப்பை குடும்பத்திற்காக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி, 2023 ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்தம் முடிவடைந்து, தற்போது இண்டர்மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டில் சவுதியின் அல் இத்திகாத் அணியில் விளையாட வந்த வாய்ப்பை மெஸ்ஸி நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அல் இத்திகாத் அணி தலைவர் அன்மார் அல் ஹய்லி, பிஎஸ்ஜி உடனான அவரது ஒப்பந்தம் முடிந்ததும் நான் அவரைத் தொடர்பு கொண்டு அவருக்கு அன்றைய மதிப்பில் சுமார் ரூ13,000 கோடி வழங்க முன்வந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய சலுகையை அவர் தனது குடும்பத்திற்காக நிராகரித்தார். பணத்தை விட குடும்பம் முக்கியமானது என்றார். இதை நான் மதிக்கிறேன். மெஸ்ஸி எப்போது விரும்பினாலும் அவர் மீண்டும் எங்கள் அணிக்கு வரலாம். அவர் கேட்கும் தொகையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
