மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் 2 ஆண்டுக்கு பின் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் ஆடுகிறது. 3வது ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கும் நிலையில், டி-20 போட்டி தொடர் வரும் 21ம்தேதி ஜம்தா விசிஏ மைதானத்தில் தொடங்குகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி-20 அணியில், காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் முழுமையாகவும், திலக் வர்மா முதல் 3 போட்டியில் இருந்தும் விலகியுள்ளனர். இதனால், திலக் வர்மாவிற்கு பதிலான ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரேயாஸ் டி-20 அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக அவர், 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூருவில் டி-20 போட்டியில் ஆடியிருந்தார். இதேபோல், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவிபிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், 2025 ஜனவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி-20 போட்டியில் ஆடியிருந்தார்.
