மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆறாவது சுற்று நிறைவு..!!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் ஆறாவது சுற்று முடிவடைந்தது. 465 காளைகள் களம் கண்டது. 101 காளைகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 20 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்தி 12 காளைகளையும், பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும், பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 7 காளைகளையும் பிடித்துள்ளனர். 6வது சுற்றில் காயமடைந்தவர்கள் விவரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 13, காளை உரிமையாளர்கள் 06 பார்வையாளர்கள் 04 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் 04 மொத்தம் 27 பேரும் காயம் அடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 08 பேர் அனுமதி பெற்றுள்ளனர்.

Related Stories: