விவசாயிகள் சந்ேதாஷமாக இருக்க வேண்டும்; ரசிகர்களை சந்தித்த பின்பு ரஜினிகாந்த் பேட்டி

 

சென்னை: தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர், ரசிகைகளுக்கு முன்னணி நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘விவசாயிகள் சந்ேதாஷமாக இருந்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்று சொன்னார். தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று காலை 9 மணியளவில், சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர், ரசிகைகளை நோக்கி ரஜினிகாந்த் கைகளை அசைத்தும், தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரஜினிகாந்தை நேரில் பார்த்து ஆரவாரம் செய்த ரசிகர், ரசிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சால்வை உள்பட பல்வேறு பொருட்களை அன்பளிப்பாக வழங்கினர். அதை சிரித்து முகத்துடன் ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டார்.

அதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக, விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக, ஹேப்பியாக இருந்தால்தான் மற்றவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்றார். அதை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்துக்கான அப்டேட் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அந்த படம் அனைவருக்கும் பொழுதுபோக்கு தரக்கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்’ என்றார். தற்போது அவர் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ெஜயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

 

Related Stories: