கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஸ்கரின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். குறிஞ்சிப்பாடியில் காய்கறி இலவசமாக தர மறுத்த கடைக்காரர் ரமேஷை சுபாஷ்கர் நேற்று வெட்டிவிட்டு தப்பியுள்ளார். தப்பித்துச் சென்ற சுபாஷ்கரை பிடிக்கச் சென்ற போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
