நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாளை தை திருவிழா ேதரோட்டம்

நாகர்கோவில், ஜன.27 : நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 20ம்தேதி தொடங்கியது. 29ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. 9ம் திருவிழாவான நாளை (28ம்தேதி) காலை 7.30க்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 29ம் தேதி 10ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 9.30க்கு, ஆறாட்டு துறையில் இருந்து சுவாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: