×

தொடர் மழை எதிரொலி; குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு

குன்னூர்: மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காந்திபுரம் அருகே பாறை கற்களுடன் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால், குன்னூரில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி செல்லும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் அவ்வழியாக எந்தவொரு வாகனமும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து குன்னூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மண் சரிவை சீர் செய்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Coonoor-Metupalayam ,Coonoor ,Coonoor-Metupalayam road ,Nilgiris district ,Coonoor… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...