- சட்டமன்ற உறுப்பினர்
- ரிஷபேஸ்வரர் கோயில்
- அகஸ்தியர்
- சித்தர் ஜீவசமாதி
- செங்கம் நகரம்
- செங்கம்
- அகஸ்திய சித்தர் ஜீவ சமாதி
- எம் பி கிரி
செங்கம், ஜன. 10: செங்கம் நகரில் வரும் 28ம் தேதி அகத்திய சித்தர் ஜீவசமாதி உடைய ரிஷபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய எம்எல்ஏ மு.பெ.கிரி அறிவுறுத்தினார். செங்கம் நகரில் 1,600 ஆண்டுகள் மிகவும் பழமையான அகத்திய சித்தர் ஜீவசமாதி உடைய அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் நேற்று அனுபாம்பிகை கோயில் வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ மு.பெ.கிரி பேசியதாவது: வரும் 28ம் தேதி ரிஷபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெறுகிறது. விழாவை அனைவரும் ஒற்றுமையாக சிறப்போடு நடத்தி தர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், திருப்பணி குழு தலைவர் கஜேந்திரன், உபயதாரர்கள் வெங்கடேஸ்வரா, பாபு, சம்பத் முரளிதரன், கிருத்திகாபாபு, எஸ்.எஸ்.சேட்டு, விக்னேஷ் சேட்டு, நகராட்சி தலைவர் சாதிக் பாஷா, நகர மன்ற உறுப்பினர்கள் முருகமணி, பாலு, ஜெயவேல், தட்சணாமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சத்தார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், முக்கிய பிரமுகர்கள், விழா குழுவினர், உபயதாரர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
