×

செய்யாற்றின் குறுக்கே ரூ.13.5 கோடியில் பாலம் கட்டும் பணி 18 மாதத்தில் முடியும் அதிகாரிகள் தகவல் மண்டகொளத்தூர் – கரிகாத்தூர் அருகே

சேத்துப்பட்டு, மார்ச் 3: சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மண்டகொளத்தூர் – கரிக்காத்தூர் இடையே செய்யாற்றில் மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.13.5 கோடியில் புதியபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் கரிகாத்தூர் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.13.5 கொடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், சேத்துப்பட்டு – போளூர் நெடுஞ்சாலை, மண்டகொளத்தூர் கூட்டு சாலையில் இருந்து கரிகாத்தூர் வழியாக திருமலை, வடமாதிமங்கலம் வம்பலூர்,சதுப்பேரி, மடவிளாகம்,எட்டிவாடி,ஜம்பு கோணாம்பட்டு, கீழ்ப்பட்டுகிராமங்கள் வழியாகஆரணி -போளூர் இணைப்பு சாலை உள்ளது.

மண்டகொளத்தூர் -கரிக்காத்தூர் குறுக்கே செய்யாறு செல்கிறது. அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் செயல்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அந்தப் பாலம் சிதிலமடைந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்த நிலையிலும் பயணத்துக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் இங்கு புதிய பாலம் கட்ட கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.5 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இப்பணிக்கான பூமி பூஜை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நடைபெற்றது. தற்போது பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 18 மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cheyyar river ,Mandakolathur – ,Karikathur ,Chettupattu ,Cheyyar ,Mandakolathur ,Panchayat Union ,
× RELATED பச்சிளம்குழந்தை மூச்சுத்திணறி பலி வந்தவாசி அருகே தாய்ப்பால் குடித்த