×

பந்தலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு

பந்தலூர்,ஜன.9:பந்தலூரில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தலூர் பஜாரில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு,போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை பந்தலூர் பஜாரில் நடைபெற்றது.

தேவாலா டிஎஸ்பி கல்யாணகுமார் கலந்து கொண்டு போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சேரம்பாடி கலைக்குழு சார்பில் மேளதாளத்துடன் பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐகள் திருக்கேஷ்வரன், இளஞ்சேரன், ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Pandalur ,Pandalur Bazaar ,Devala… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை