சாலை அமைக்கும் போது தனியாக நடைபாதை வசதி: அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜன. 26: சாலைகள் அமைக்கும் போதே தனிநடைபாதை வசதி செய்யக்ேகாரிய வழக்கில் அரசுத்தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதுரையில் மட்டும் கடந்த 2017ல் 72 பேர், 2018ல் 66 பேர் பலியாகியுள்ளனர். சாலையோரங்களில் நடந்து செல்லவும், சாலையை கடக்கவும் முறையான நடைபாதை வசதி இல்லாததாலும் விபத்துகள் நடக்கின்றன.

சாலைகள் அமைக்கும்போதே பாதசாரிகளுக்கும், சைக்கிளில் செல்வோருக்கும் முறையான பாதை வசதி செய்தால் விபத்துக்களை தவிர்க்க முடியும். மதுரையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் சாலை அமைக்கும் இடங்களில் பாதசாரிகளுக்கென தனியாக நடைபாதை வசதி செய்ய வேண்டுமேன உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், தமிழக போக்குவரத்து துறைச்செயலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.22க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: