- ஐஏஎஸ்
- புது தில்லி
- வந்தனா திரிபதி
- நியூ பஸ்தி கிட்கஞ்ச்
- உத்திரப்பிரதேசம்
- Prayagraj
- அயோத்தி
- சர்வேஷ் திவேதி
புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (பழைய அயோத்தி) நியூ பஸ்தி கிட்கஞ்ச் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதி என்பவருக்கு சொந்தமாக 2 அடுக்கு வீடு உள்ளது. அந்த வீட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சர்வேஷ் திவேதி என்பவர் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த வீட்டிற்கு இரவு நேரங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் அடிக்கடி வந்து செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். உடனே கிட்கஞ்ச் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டை சூழ்ந்தனர்.
போலீசாரை பார்த்ததும் உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டி கொண்டனர். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று வெவ்வேறு அறைகளில் இளம்பெண்களும், இளைஞர்களும் ஆபாசமான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு சோதனை நடத்தி ஏராளமான காண்டம் மற்றும் அரைகுறை ஆடைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றினர். இந்த சோதனையில் மேற்கு வங்கம், வாரணாசியை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் பிரயாக்ராஜை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், இந்த தொழிலை நடத்தி வந்த மூளையாக செயல்பட்ட சர்வேஷ் திவேதி, மயங்க் குஷ்வாஹா (19), அனுஜ் மிஸ்ரா (23), சைஃபுல் சித்திக் (23), அதுல் குமார் (35) ஆகிய 5 ஆண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளம்பெண்களில் ஒருவர் கூறுகையில், ‘ஃபேஸ்புக் மூலமாக இந்த கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே தான் பிரயாக்ராஜ் வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த நெட்வொர்க்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
