×

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா துவங்கியது

 

கோத்தகிரி, ஜன. 6: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா நேற்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழா, படுகர்‌ இன‌ குலதெய்வமான பேரகணி ஹெத்தையம்மன் கோயிலில் தொடங்கப்பட்டு 8 நாட்கள் நடைபெறும். விழாவானது கேர்பெட்டா, பேரகணி, காத்துக்குளி, பெத்தளா ஆகிய பகுதிகளில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில்களில் நடைபெறும்.
விழாவில் படுகர்‌ இன மக்கள் குலதெய்வத்திற்கு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் காணிக்கையை கட்டி, வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் செலுத்தி தடி எடுத்து விழாவை சிறப்பிப்பார்கள். கேர்பெட்டா, பேரகணியில் திங்கள், புதன், ஞாயிற்றுகிழமைகளிலும், வெள்ளிக்கிழமை காத்துக்குளியிலும், திங்கட்கிழமை பெத்தளாவிலும் விழாவானது நடைபெறும். நீலகிரி மாவட்டத்தில் வாழும் அனைத்து ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின்‌ பண்பாடு மற்றும் கலாச்சாரம் மாறாமல் வெள்ளை நிற உடை அணிந்து விழாவை கொண்டாடுவார்கள்.

Tags : Hettayamman ,Gothagiri ,Kotagiri ,HETHAYAMMAN FESTIVAL ,DEITY ,PADUKAR PEOPLE ,NEILAGIRI DISTRICT ,Peragani Hettayamman Temple ,Padukhar ,
× RELATED ஹைபீல்டு சாலையில் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரங்களை அகற்ற கோரிக்கை