கூடலூர், ஜன. 6: கூடலூரில் இருந்து நாடுகாணி, கீழ் நாடுகாணி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதி வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதில், நாடுகாணியில் இருந்து தமிழக எல்லை பகுதியில் உள்ள 6 கி.மீ. தூர சாலையில் கடந்த மாதம் 5 கி.மீ. தூரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சாலையில் இடையிடையே ஒரு கி.மீ. தூரத்திற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சாலை சீரமைக்கப்பட்டும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வரும் மழை காலத்திற்கு முன்பாக சீரமைக்கப்படாமல் உள்ள பகுதிகளையும் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
