×

தாளவாடியில் இன்று அதிகாலை தோட்டத்தில் மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய யானை: விரட்டி அடித்த விவசாயிகள்

 

சத்தியமங்கலம், ஜன. 5- தாளவாடி அருகே இன்று அதிகாலை மக்காச்சோள தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானையை விவசாயிகள் விரட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜோரைக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை தமிழ்புரம் கிராமத்திற்குள் நுழைந்தது.

அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. காட்டு யானை தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Talawadi ,Sathyamangalam ,Tigers ,Forest ,Erode District ,
× RELATED 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்!