பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த வணிகர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கான வணிக விசாக்களுக்கான அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இ-பி- 4 எனப்படும் இ பிசினஸ் விசா இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசா சுமார் 45 முதல் 50 நாட்களில் வழங்கப்படும். மேலும் இந்த விசா மூலமாக 6 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
