சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது. இது உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது. இந்த தகவல்கள் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
