×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கைத்தல சேவை: நாளை திருமங்கை மன்னன் வேடுபறி

 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயி​லில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா​வில் ராப்​பத்து உற்சவத்​தின் 7ம் நாளான இன்று மாலை நம்பெரு​மாள் கைத்தல சேவை நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெரு​மாள் மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு சொர்க்க வாசலை கடந்​தார். திருமங்கை மன்னன் வேடுபறி நாளை நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.

பகல் பத்து நாளில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல்(சொர்க்கவாசல்) திறப்பு கடந்த 30ம் தேதி நடந்தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. ராப்​பத்து உற்சவத்​தின் 7ம் நாளான இன்று மாலை நம்பெரு​மாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெரு​மாள் மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு சொர்க்க வாசலை கடந்​தார். பின்னர் அங்கிருந்து புறப்​பட்டு மாலை 5.45 மணிக்கு திரு​மாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்​மாழ்​வார் பராங்குச நாயகியான திருக்​கோலத்​தில்) நடைபெறுகிறது.

அதன்​பின், உபயதாரர் மரியாதை​யுடன் பொது ஜனசேவை நடைபெறும். இரவு 11.30 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத்​தி​யத்​துடன் நம்பெரு​மாள் மூலஸ்​தானம் சென்றடைகிறார். ராப்​பத்து உற்சவத்​தின் 8ம் நாளான நாளை(6ம் தேதி) திரு​மங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்​தில் இருந்து நம்பெரு​மாள் தங்க குதிரை வாகனத்​தில் புறப்​பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திரு​மாமணி மண்டபம் சென்​றடைகிறார்.

அங்கு உபயதாரர் மரியாதை​யுடன் பொதுஜன​சேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத்​தி​யத்​துடன் நம்பெரு​மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகிறார். நாளை சொர்க்கவாசல் திறக்கப்படாது. விழா​வின் 10ம் திருநாளான 8ம் தேதி தீர்த்​தவாரி நடைபெறும். வரும் 9ம் தேதி நம்மாழ்​வார் மோட்​சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்​சி​யுடன் வை​குண்ட ஏ​காதசி ​விழா நிறைவடைகிறது.

Tags : Namperumal Kaithala Seva ,Srirangam Ranganathar Temple ,Thirumangai Mannan ,Trichy ,Rappattu Utsavat ,Vaikunta Ekadashi festival ,Namperumal ,Thirumangai ,Mannan… ,
× RELATED பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை...