×

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் தமிழ் நிலத்தின் ஆளுமைகளை தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்: முதல்வர் பதிவு

சென்னை: தமிழ்நிலத்தின் ஆளுமைகளை தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என முதல்வர் பதிவிட்டுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியாரும், வீரபாண்டிய கட்டபொம்மனும்! இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையை தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தோம். தமிழ்நிலத்தின் ஆளுமைகளை தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!

Tags : Velunachiyar ,Veerapandiya Kattabomman ,Tamil ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Veeramangai Velunachiyar ,
× RELATED மதுரைக்கு வந்த முதல்வர்...