மதுரை மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் இடமாற்றம்

மதுரை, ஜன. 24: மதுரை மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தார் சையது முகைதீன், வடக்கு முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், கிழக்கு தனி தாசில்தார் விக்னேஸ்வரக்குமார், வடக்கு கூடுதல் கோட்ட கலால் அலுவலராகவும், பேரையூர் தனி தாசில்தார் சசிகலா, திருமங்கலம் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். மதுரை அலகு 1 தனி தாசில்தார் கருப்பையா, அலகு 2 தனி தாசில்தாராகவும், உசிலம்பட்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி, உசிலம்பட்டி தனி தாசில்தாராகவும், வடக்கு முத்திரைத்தாள் தனி தாசில்தார் வளர்மதி, வடக்கு அலகு 3 தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

திருமங்கலம் ரயில்பாதையாக்கம் தனி தாசில்தார் நாகரத்தினம், தெற்கு கலால் மேற்பார்வை அலுவலராகவும், தெற்கு தாசில்தார் சோமசுந்தர சீனிவாசன், கிழக்கு அலகு 2 தனி தாசில்தாராகவும், திருமங்கலம் சிப்காட் அலகு 3 தனி தாசில்தார், திருப்பரங்குன்றம் அலகு 5 தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். திருமங்கலம் அலகு 6 தனி தாசில்தார் பார்த்திபன், கிழக்கு கலால் மேற்பார்வை அலுவலராகவும், திருப்பரங்குன்றம் அலகு 5 தனி தாசில்தார் சுரேஷ், நத்தம் சாலை அலகு 1 தனி தாசில்தாராகவும், உசிலம்பட்டி தனி தாசில்தார் சுந்தரமுருகன், மதுரை தெற்கு தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்,

வாடிப்பட்டி தாசில்தார் சிவகுமார், மதுரை கலால் உதவி ஆணையர் அலுவலக தாசில்தாராகவும், தெற்கு கலால் மேற்பார்வை அலுவலரான பஞ்சாட்சரம், திருமங்கலம் அலகு 6 தனி தாசில்தாராகவும், மதுரை சுற்றுச்சாலை தனி தாசில்தார் மேகலா, மதுரை அலகு 2 தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். மதுரை தெற்கு வருவாய் தாசில்தார் கதிர்வேல், மேலூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, வாடிப்பட்டி தாசில்தாராகவும், மதுரை வடக்கு அலகு 3 தனி தாசில்தார் பாண்டியகீர்த்தி, மதுரை சுற்றுச்சாலை தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். மதுரை கிழக்கு கலால் மேற்பார்வை அலுவலர் சூரியகுமாரி, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், மதுரை ஆலயநிலங்கள் தனி தாசில்தார் சுமதி, திருமங்கலம் ரயில் பாதையாக்கம் தனி தாசில்தாராகவும், திருமங்கலம் அலகு 1 தனிதாசில்தார் இந்திராகாந்தி, பேரையூர் அலகு 2 தனி தாசில்தாராகவும், நத்தம் சாலை அலகு 1 தனிதாசில்தார் இதயகமலம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

Related Stories:

>