காமெடியில் செல்லூரை பின்னுக்கு தள்ளிய செங்ஸ்: அமைச்சர் கலாய்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கயம் பகுதியில் வாரச்சந்தை உள்ளிட்டவைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள்.

த.வெ.க. தலைவர் விஜய்தான் முதல்வர் என அந்த கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி வருகிறார். மேலும், விஜய்யை நிரந்தர முதல்வர் ஆக்குவேன் எனவும் அவர் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. இது சிறந்த நகைச்சுவை. காமெடியில் செங்கோட்டையன், செல்லூர் ராஜுவை பின்னுக்கு தள்ளிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: