சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள்(மெயின் தேர்வு) 8.2.2026 மற்றும் 22.2.2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் வகுப்புகள் வருகிற 5ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
சேர விரும்புவோர் https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 கூகுள் படிவத்தில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலைநாட்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) நேரில் அணுகலாம் அல்லது decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம். போட்டித் தேர்வர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
