டூவீலர்கள் மோதலில் மூதாட்டி உயிரிழப்பு

திருமங்கலம், ஜன. 1: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள சில்வார்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி போத்தம்மாள்(60). இவர் நேற்று திருமங்கலத்தினை அடுத்த கப்பலூரில் உள்ள அவரது பேத்தியின் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் உறவினரின் டூவீலரின் பின்னால் அமர்ந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர்கள் மறவன்குளம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு டூவீலர் போத்தியம்மாள் சென்ற டூவீலரின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சாலையில் விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், போத்தியம்மாளின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: