வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் கிராம விரைவு ஊரக ஆய்வு

பழநி, ஜன.1: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள், பழநி அருகே அப்பியம்பட்டி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி வேளாண் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி இம்மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு கிராம விரைவு ஊரக ஆய்வு நிகழ்ச்சி நடத்தினர். ஆய்வின் மூலம் குறைந்த காலத்தில் கிராமத்தின் நிலைமைகள், தேவைகள் மற்றும் சிக்கல்களை அறியும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். கிராமத்தின் வளங்கள் மற்றும் குறைகளை வரைபடம், கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் சேகரித்தனர்.

கிராம வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வரைபடம், பயிர்பட்டியல், பிரச்னை பகுப்பாய்வு வரைபடம் மூலம் ஆய்வுக்கூறுகளை வரைந்து குறைகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆய்வு நிகழ்வில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: