மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை மாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (50). உண்ணாமலைக்கடை பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார். கடந்த 17ம் தேதி இரவு ஸ்டாலின் தனது வீட்டின் அருகே உள்ள சிறிய பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் பாலத்தில் இருந்து சுமார் 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார்.
