அதிர்ஷ்டத்தை அள்ளித் தருமா ஆங்கிலப் புத்தாண்டு – 2026?

காலம்தான் எத்தனை வேகமாக ஓடிவிடுகிறது! அப்படி என்ன அவசரம் அதற்கு? நினைத்துப் பார்த்தாலும், வியப்பாக அல்லவா இருக்கிறது!! ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், அதே எதிர்பார்ப்புகள்! அதே நம்பிக்கைகள்!! ஆம், நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும்தான் மனித வாழ்க்கையே ஓடுகிறதல்லவா?

மனித வாழ்க்கை என்பதே – சுகமும், துக்கமும் மாறி மாறி வரும் அனுபவந்தானே? கீதா நாயகனான  கண்ணனும், குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் இந்த உண்மையைத் தானே அருளியிருக்கிறான்!

ஆயினும், மனித மனம் மட்டும் மானிட வாழ்க்கையை அலுத்துக் கொள்வதில்லை!மானுட வாழ்க்கையில், “போதும்” -என்ற மனநிலை எவருக்கும் ஏற்படுவதில்லை! இத்தகைய மன நிலையையே நவ கிரகங்்களில் சந்திரனின் ராசி மாறுதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. காரணம், சந்திரன்தான் மக்களின் மாறி, மாறி வரும் மன நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆதலால்தான், சந்திரனை மனோ காரகர் என புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன, மிக, மிக பழைமையான கிரேக்க வானியல் நூல்களும் சந்திரனின் கிரணங்கள் மூளையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிக்கினறன என விவரித்துள்ளன. சந்திரனுக்கும், மானிடர்களின் மன உணர்ச்சிகளுக்கும் உள்ள நேரிடையான தொடர்பினை தற்கால வானியல் நிபுணர்களிடம் விவரித்துள்ளனர்.

நவகிரகங்களில் மிக வேகமாக சுழன்றுவருவது, சந்திரனே! ஆதலால்தான், மனித மனமும் வெகு வேகமாக சிந்தனை அலைகளால் பாதிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவர்களில் சிந்தனை மற்றும் செயல் திறன்கள் மனம் மற்றும் செயல் ஆகிய இரு திறமைகளில் வகுக்கப்பட்டுள்ளன.அதாவது, லக்கினம்், ராசி இவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது, மனிதனின் சிந்தனை மற்றும் செயல் ஆற்றல்கள்.நவகிரகங்களில் சரீர காரகர் எனப்படும் சூரியன் மற்றும் மனோ காரகர் எனப்படும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களின் ஜனனகால சஞ்சார நிலைகளின் அடிப்படை நிலையிலேயே ஒருவரின் செயல் திறனும், சிந்தனைத் திறனும் நிர்ணயிக்கப்படுகின்றன.இதேபோன்று, பூமிகாரகர் எனப்படும் செவ்வாய் கிரகத்தின் சஞ்சார நிலையும், சூரியன் வலம் வருவதன் நிலையும், மழை, சீதோஷணம், விவசாயம், கால்நடைகளின் அபிவிருத்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் மூன்றரை மாதங்கள் கிரக நிலைகளின் மிகப் பெரிய மாறுதல்கள் எதுவும் நிகழவில்லை! இருப்பினும், அதன் பிறகு, சூரியன், குரு, ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் மாறுகின்றன. இத்தகைய மாறுதல்கள் பூவுலக மக்களை எவ்விதம் பாதிக்கப்படவுள்ளன என்பதை வானியல் விதிகளின் அடிப்படையில், துல்லியமாகக் கணித்து எமது மதிப்பிற்குரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு விவரமாக சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

இப்புத்தாண்டின் மிக முக்கிய மாறுதல்கள் குரு, சனி மற்றும் ராகு, கேது ஆகிய கிரகங்களின் ராசி மாறுதல்களேயாகும்! இக்கட்டுரையில் விளக்கியுள்ள பலன்கள் அனைத்தும், இத்தகைய மிக முக்கிய கிரக மாறுதல்களைக் கணக்கில் கொண்டே நிர்ணயித்துள்ளவையாகும்.அனைத்து பலன்களும், “ஷோடஸ ஸதவர்க்கம்” என்னும் மிகப் புராதன, ஜோதிட விதிகளின்படி துல்லியமாகக் கணித்துக் கூறப்பட்டவைகளாகும்.

இப்பலன்கள், எமது வாசக அன்பர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகப் பயனுள்ளவைகளாகவும், அவர்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்பவையாகும்.

இவ்வாண்டில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்:-

ஜனவரி

ஜனவரி 1: வியாழக்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு தினம், பிரதோஷம்.

ஜனவரி 3: சனிக்கிழமை – ஆருத்ரா தரிசனம் – சிதம்பரம் தரிசனம் – விசேஷம்

ஜனவரி 4: ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீ ரமண மகரிஷி அவதார தினம்.

ஜனவரி 6: செவ்வாய்க்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி

ஜனவரி 7: புதன்கிழமை – திருவையாறு திரு தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை.

ஜனவரி 10: சனிக்்கிழமை – தேவதேவாஷ்டமி

ஜனவரி 11: ஞாயிற்றுக்கிழமை – கூடார வல்லி

ஜனவரி 12: திங்கட்கிழமை – ஸ்ரீ லட்சுமி நரசிமமர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம்

ஜனவரி 14: புதன்கிழமை – போகிப் பண்டிகை

ஜனவரி 15: வியாழக்கிழமை – தை மாதப் பிறப்பு. உத்தராயணப் புண்ணியக் காலம். மகர சங்கராந்தி – பொங்கல் பண்டிகை

ஜனவரி 16: வெள்ளிக்கிழமை – மாட்டுப் பொங்கல் – பசு மற்றும் காளை மாடுகளை நன்னீராட்டி, சந்தனம், குங்கும் இட்டு, பூக்களால் அலங்கரித்து, பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

ஜனவரி 17: சனிக்கிழமை – காணும் பொங்கல். பெரியோர்களைக் கண்டு, நமஸ்கரித்து அவர்களின் ஆசிகளைப் பெறவேண்டிய நன்னாள்.

ஜனவரி 18: ஞாயிற்றுக்கிழமை – தை அமாவாசை. பித்ருக்களை(மறைந்த முன்னோர்கள்) பூஜித்து, அவர்களது ஆசியைப் பெறவேண்டிய புண்ணிய தினம்.

ஜனவரி 19: திங்கட்கிழமை முதல், 27-01-26 வரை – சியாமளா நவராத்திரி

ஜனவரி 20: செவ்வாய்க்கிழமை – திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்

ஜனவரி 23: வெள்ளிக்்கிழமை – வசந்த பஞ்சமி

ஜனவரி 24: சனிக்்கிழமை – சஷ்டி விரதம்.

ஜனவரி 25: ஞாயிற்றுக்கிழமை – ரத சப்தமி

ஜனவரி 26: திங்கட்கிழமை – பீஷ்மாஷ்டமி

ஜனவரி 27: செவ்வாய்க்கிழமை – கிருத்திகை விரதம்

ஜனவரி 29: வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி

ஜனவரி 30: வெள்ளிக்கிழமை – பிரதோஷம்

ஜனவரி 31: சனிக்்கிழமை – வளர்பிறை சதுர்த்தசி லட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி – லட்சுமி நரசிம்மருக்கு மிகவும் உகந்த திதி.

பிப்ரவரி

பிப்ரவரி 1: ஞாயிற்றுக்கிழமை – தைப் பூசம், மேலும் இன்று ஆகாமாவை நாட்கள் – நதிதீரங்களில் நீராட உகந்த நாட்கள். இந்த நன்னாட்களின் சூரிய உதயகாலத்தில் பௌர்ணமி திதி இருப்பதால், இக்காலகட்டத்தில் நதிதீரங்களில் ஸ்நானம் செய்தால், மகத்தான புண்ணிய பலன்களை அள்ளிக் கொடுப்பதாக அநேக புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5: வியாழகக்ிழமை – சங்கட ஹர சதுர்த்தி

பிப்ரவரி 6: வெள்ளிக்கிழமை – திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஜெயந்தி

பிப்ரவரி 12 வியாழக்கிழமை – விஷ்ணுபதி புண்ணியக் காலம்

பிப்ரவரி 13: வெள்ளிக்கிழமை – மாசி மாதப் பிறப்பு.

பிப்ரவரி 14: சனிக்்கிழமை – சனிப் பிரதோஷம்

பிப்ரவரி 15: ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி.

பிப்ரவரி 16: திங்கட்கிழமை – திருவோண விரதம், போதாயண அமாவாசை

பிப்ரவரி 17: செவ்வாய்க்கிழமை – சர்வ அமாவாசை

பிப்ரவரி 21: சனிக்கிழமை – சதுர்த்தி விரதம்.

பிப்ரவரி 22: ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்

பிப்ரவரி 23: திங்கட்கிழமை – கிருத்திகை விரதம்

பிப்ரவரி 27: வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி

29-1-2026 புதன், கும்ப ராசிக்கு மாறுதல்.

7-2-2026 சுக்கிரன், கும்ப ராசிக்கு மாறுதல்.

மார்ச்

மார்ச் 1: ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம்

மார்ச் 2-3: திங்கட்கிழமை – மாசி மகம், ஹோலிப் பண்டிகை.

மார்ச் 3: செவ்வாய்க்்கிழமை – பௌர்ணமி, சந்திர கிரகணம்.

மார்ச் 6: வெள்ளிக்கிழமை – சனிப் பெயர்ச்சி.

மார்ச் 7: சனிக்்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

மார்ச் 15: ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி, பங்குனி மாதப் பிறப்பு.

மார்ச் 16: திங்கட்கிழமை – பிரதோஷம்.

மார்ச் 18: புதன்கிழமை – சர்வ அமாவாசை

மார்ச் 24: செவ்வாய்க்்கிழமை – சஷ்டி விரதம்.

மார்ச் 27: வெள்ளிக்கிழமை – ஸ்ரீ ராம நவமி.

மார்ச் 29: ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி

மார்ச் 30: திங்கட்கிழமை – பிரதோஷம்.

மார்ச் 31: செவ்வாய்க்கிழமை – மஹாவீர் ஜெயந்தி,

ஏப்ரல்

ஏப்ரல் 1: புதன்கிழமை – பங்குனி உத்திரம்

ஏப்ரல் 5: ஞாயிற்றுக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

ஏப்ரல் 7: செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ வராஹ ஜெயந்தி.

ஏப்ரல் 11: சனிக்கிழமை – திருவோண விரதம்.

ஏப்ரல் 14: செவ்வாய்க்கிழமை – பராபவ தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு விஷூ புண்ணியக் காலம்.

ஏப்ரல் 15: புதன்கிழமை – பிரதோஷம். மத்ஸ்ய அவதார தினம், மாத சிவராத்திரி.

ஏப்ரல் 16: வியாழக்கிழமை – போதாயன அமாவாசை.

ஏப்ரல் 17: வெள்ளிக்கிழமை – அமாவாசை,

ஏப்ரல் 19: ஞாயிற்றுக்கிழமை – கிருத்திகை விரதம்.

ஏப்ரல் 20: திங்கட்கிழமை – அட்சய திருதீயை.

ஏப்ரல் 21: செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி.

ஏப்ரல் 22: புதன்கிழமை – ஸ்ரீ மத் ராமானுஜய ஜெயந்தி, சஷ்டி விரதம்.

ஏப்ரல் 27: திங்கட்கிழமை – சர்வ ஏகாதசி

ஏப்ரல் 29: புதன்கிழமை – பிரதோஷம்.

ஏப்ரல் 30: வியாழக்கிழமை – ஸ்ரீ  நரசிம்ம ஜெயந்தி.

மே

மே 4: திங்கட்கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

மே 5: செவ்வாய்க்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

மே 9: சனிக்கிழமை – திருவோண விரதம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

மே 13: புதன்கிழமை – ஏகாதசி விரதம்.

மே 14: வியாழக்கிழமை – பிரதோஷம்.

மே 15: வெள்ளிக்கிழமை – வைகாசி மாதப் பிறப்பு.

மே 16: சனிக்கிழமை – சர்வ அமாவாசை.

மே 20: புதன்கிழமை – சதுர்த்தி விரதம்.

மே 21: வியாழக்கிழமை – சித்த மகா புருஷர் கமல முனிவர் பெருமானாரின் அவதாரப் புண்ணிய தினம்.

மே 22: வெள்ளிக்கிழமை – சஷ்டி விரதம்.

மே 27: புதன்கிழமை – சர்வ ஏகாதசி.

மே 28: வியாழக்கிழமை – அக்னி நட்சத்திரம் நிவர்்த்தி, பிரதோஷம்.

மே 30: சனிக்கிழமை – வைகாசி விசாகம். சித்த மகா புருஷர் நந்தீசர் பகவானின் அவதாரப் புண்ணிய தினம்்.

மே 31: ஞாயிற்றுக்கிழமை – காஞ்சி ஸ்ரீமகாபெரியவாள் ஜெயந்தி.

ஜூன்

ஜூன் 4: வியாழக்கிழமை – சங்கட ஹர சதுத்தி

ஜூன் 5: வெள்ளிக்கிழமை – திருவோண விரதம்.

ஜூன் 7: ஞாயிற்றுக்கிழமை – பானுஸப்தமி. மேலும் இன்று சித்த மகாபுருஷர் கௌபால ரிஷி-யின் அவதாரப் புண்ணியத் தினம்.

ஜூன் 11: வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.

ஜூன் 12: வெள்ளிக்கிழமை – பிரதோஷம். மேலும், இன்றைய தினம் சித்த மகா புருஷர் போகர்-ன் அவதாரப் புண்ணியத் தினம்.

ஜூன் 13: சனிக்கிழமை – கிருத்திகை விரதம், மாத சிவராத்திரி.

ஜூன் 14: ஞாயிற்றுக்கிழமை – சர்வ அமாவாசை.

ஜூன் 15: திங்கட்கிழமை – ஆனிமாதப் பிறப்பு.ஷடசீதி புண்ணியக் காலம்.

ஜூன் 18: வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்.

ஜூன் 20: சனிக்கிழமை – சஷ்டி விரதம்.

ஜூன் 22: திங்கட்கிழமை – ஆனித் திருமஞ்சனம். நடராஜர் அபிஷேகம்.

ஜூன் 25: வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.

ஜூன் 27: சனிக்கிழமை – சனிப் பிரதோஷம்.

ஜூலை

ஜூலை 2: வியாழக்கிழமை – திருவோண விரதம்.

ஜூலை 3: வெள்ளிக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

ஜூலை 10: வெள்ளிக்கிழமை – கிருத்திகை விரதம். மேலும், இன்றைய தினம் சித்த மகா புருஷர் ரோமரிஷி-யின் அவதாரப் புண்ணிய தினம்.

ஜூலை 11: சனிக்கிழமை – கூர்ம ஜெயந்தி.

ஜூலை12: ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம், மாத சிவராத்திரி.

ஜூலை 13: திங்கட்கிழமை – போதாயன அமாவாசை.

ஜூலை 14 : செவ்வாய்க்கிழமை – அமாவாசை.

ஜூலை17: வெள்ளிக்கிழமை – தட்சிணாயண புண்ணியக் காலம், ஆடிமாதப் பிறப்பு.

ஜூலை 19: ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்

ஜுலை 23: வியாழக்கிழமை – சித்த மகா புருஷர் குதம்பைச் சித்தரின் அவதாரப் புண்ணிய தினம்.

ஜூலை 25: சனிக்்கிழமை – சர்வ ஏகாதசி.

ஜூலை 26: ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம். சாதுர்மாத விரதம் ஆரம்பம்.

ஜூலை 29: புதன்கிழமை – பௌர்ணமி விரதம், குரு பூர்ணிமா. வியாச பூஜை

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 2: ஞாயிற்றுக்கிழமை – சங்கட ஹர சதுர்த்்தி

ஆகஸ்ட் 3: திங்கட்கிழமை – ஆடி பதினெட்டாம் பெருக்கு. காவிரி பூஜை.

ஆகஸ்ட் 6: வியாழக்கிழமை – கிருத்திகை விரதம்.

ஆகஸ்ட் 9: ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி, பிரதோஷம்.

ஆகஸ்ட் 11: செவ்வாய்க்கிழமை – மாத சிவராத்திரி, கிருஷ்ண, அங்காரக சதுர்த்தசி.

ஆகஸ்ட் 12: புதன்கிழமை – சர்வ அமாவாசை

ஆகஸ்ட் 14: வெள்ளிக்கிழமை – திருவாடிப் பூரம்.

ஆகஸ்ட் 15: சனிக்்கிழமை – சுதந்திர தினம்.

ஆகஸ்ட் 16: ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்.

ஆகஸ்ட் 17: திங்கட்கிழமை – நாக பஞ்சமி, கருட பஞ்சமி, விஷ்ணுபதி புண்ணியக் காலம்.

ஆகஸ்ட் 18: செவ்வாய்க்கிழமை – சஷ்டி விரதம்.

ஆகஸ்ட் 21: வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்.

ஆகஸ்ட் 23: ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி.

ஆகஸ்ட் 25: செவ்வாய்க்கிழமை – பிரதோஷம்

ஆகஸ்ட் 26: புதன் கிழமை – ருக் உபாகர்மா, ஓணம் பண்டிகை.

ஆகஸ்ட் 27: வியாழக்கிழமை – பெளர்ணமி விரதம், ஹயக்ரீவ ஜெயந்தி, யஜூர் உபாகர்மா.

ஆகஸ்ட் 28: வெள்ளிக்்கிழமை – காயத்ரி ஜெபம்.

ஆகஸ்ட் 31: திங்கட்்கிழமை – சங்கடஹர சதுர்த்தி. சித்த மகா புருஷர் சுந்தரனார்-ன் திருநட்சத்திரம்.

செப்டம்பர்

செப்டம்பர் 3: வியாழக்கிழமை – கிருத்திகை விரதம்.

செப்டம்பர் 4: வெள்ளிக்்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 7: திங்கட்கிழமை – சர்வ ஏகாதசி

செப்டம்பர் 8: செவ்வாய்க்்கிழமை – பிரதோஷம்.

செப்டம்பர் 9 : புதன்்கிழமை – மாத சிவராத்திரி.

செப்டம்பர் 10: வியாழக்கிழமை – சர்வ அமாவாசை.

செப்டம்பர் 14: திங்கட்கிழமை – ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி.

செப்டம்பர் 15: செவ்வாய்க்்கிழமை – ரிஷி பஞ்சமி,

செப்டம்பர் 17: வியாழக்கிழமை – சஷ்டி விரதம்.

செப்டம்பர் 20: ஞாயிற்றுக்கிழமை – கேதார விரதம் ஆரம்பம்.

செப்டம்பர் 22: செவ்வாய்க்கிழமை – சர்வ ஏகாதசி, திருவோண விரதம்.

செப்டம்பர் 24: வியாழக்்கிழமை – பிரதோஷம்.

செப்டம்பர் 26: சனிக்்கிழமை – பௌர்ணமி விரதம், உமா மகேஸ்வர விரதம்.

செப்டம்பர் 27: ஞாயிற்றுக்கிழமை – மகாளயபட்சம் ஆரம்பம்.

செப்டம்பர் 29: செவ்வாய்க்கிழமை – மகா பரணி.

செப்டம்பர் 30: புதன்்கிழமை – கிருத்திகை விரதம்.

அக்டோபர்

அக்டோபர் 6: செவ்வாய்க்கிழமை – சர்வ ஏகாதசி

அக்டோபர் 8: வியாழக்கிழமை – பிரதோஷம் .

அக்டோபர் 9: வெள்ளிக்கிழமை – மாத சிவராத்திரி.

அக்டோபர் 10: சனிக்கிழமை – மகாளய அமாவாசை.

அக்டோபர் 11: ஞாயிற்றுக்கிழமை – நவராத்திரி பூஜை ஆரம்பம்.

அக்டோபர் 16: வெள்ளிக்கிழமை – சஷ்டி விரதம். சரஸ்வதி ஆவாகனம்.

அக்டோபர் 18: ஞாயிற்றுக்கிழமை – ஐப்பசி மாதப் பிறப்பு, துலாக் காவேரி ஸ்நான ஆரம்பம், துர்க்காஷ்டமி.

அக்டோபர் 19: திங்கட்கிழமை – சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை.

அக்டோபர் 20: செவ்வாய்க்கிழமை – விஜயதசமி. மத்வாச்சாரியார் ஜெயந்தி

அக்டோபர் 21: புதன்கிழமை – துளசி – கௌரி விரதம்.

அக்டோபர் 22: வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.

அக்டோபர் 23: வெள்ளிக்கிழமை – பிரதோஷம்.

அக்டோபர் 25: ஞாயிற்றுக்கிழமை – பௌர்ணமி விரதம், அன்னாபிஷேகம்.

அக்டோபர் 27: புதன்கிழமை – கிருத்திகை விரதம்.

அக்டோபர் 29: வியாழக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

நவம்பர்

நவம்பர் 5: வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.

நவம்பர் 6: வெள்ளிக்்கிழமை – பிரதோஷம், எம தீபம் – எம தர்ம ராஜனுக்கு தீபங்கள் ஏற்றி வைத்து பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனைத் தரும்.

நவம்பர் 7: சனிக்்கிழமை – இரவு நரக சதுர்த்தசி ஸ்நானம். – கங்்கா தீர்த்த ஸ்நான பலன் கிட்டும்.

நவம்பர் 8: ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை, கேதார கௌரி விரதம், லட்சும்ி – குபேர பூஜை விசேஷம், சர்வ அமாவாசை.

நவம்பர் 10: செவ்வாய்க்கிழமை – கந்தர் சஷ்டி விரதம் ஆரம்பம்.

நவம்பர் 11: புதன்கிழமை – எம துவிதியை. – எம தர்மராஜரைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

நவம்பர் 13: வெள்ளிக்்கிழமை – பாம்பு புற்றிற்கு பால் சேர்ப்பது பரம புண்ணியத்தைத் தரும், நாக சதுர்த்தி.

நவம்பர் 15: ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்- சூரசம்ஹாரம். திருச் செந்தூர், சிக்கல் தரிசனம் விசேஷம்.

நவம்பர் 16: திங்கட்கிழமை – கடைமுகம் – காவிரி ஸ்நானம் விசேஷம்.

நவம்பர் 17: செவ்வாய்க்்கிழமை – முடவன் முழுக்கு.

நவம்பர் 21: சனிக்்கிழமை – சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.

நவம்பர் 22: ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம்.

நவம்பர் 24: செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ அண்ணாமலையார் தீபம். பௌர்ணமி, கிருத்திகை விரதம்.

நவம்பர் 27: வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி.

டிசம்பர்

டிசம்பர் 4: வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி.

டிசம்பர் 6: ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம்

டிசம்பர் 7: சனிக்கிழமை – மாத சிவராத்திரி

டிசம்பர் 8: ஞாயிற்றுக்கிழமை – சர்வ அமாவாசை

டிசம்பர் 13: ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம், திருவோண விரதம்.

டிசம்பர் 16: புதன்கிழமை – தனுர்மாத (மார்கழி) பூஜை ஆரம்பம்.

டிசம்பர் 20: ஞாயிற்றுக்கிழமை – வைகுண்ட ஏகாதசி.

டிசம்பர் 21: திங்கட்்கிழமை – பிரதோஷம், கிருத்திகை விரதம்.

டிசம்பர் 23: புதன்்கிழமை – பௌர்ணமி விரதம், நடராஜர் அபிஷேகம்.

டிசம்பர் 24: வியாழக்்கிழமை – ஆருத்ரா தரிசனம்.

டிசம்பர் 25: வெள்ளிக்கிழமை – ரமண பகவான் அவதார தினம்.

டிசம்பர் 27: ஞாயிற்றுக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

பொங்கல் பானை வைக்க உகந்த புண்ணிய காலம்!

ஜனவரி 15-ந் தேதி, வியாழக்கிழமை, கிருஷ்ணபட்சதிதி, துவாதசி திதி, அனுஷ நட்சத்திரத்தில், சுபயோக, சுப நன்னாளில் காலை 10.30 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் பொங்கல் பானை வைக்க வேண்டும்.

பூரண சந்திர கிரகணம்!

3-3-2026 அன்று செவ்வாய்க்கிழமை, சுக்கில பட்சம் பௌர்ணமி திதி, பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.

கிரகண ஆரம்பக் காலம் பிற்பகல் 3.20

கிரகண மத்தியமம் மாலை 5.04

கிரகண முடிவு இரவு 7.54.

பூரம், பரணி, பூராடம், மகம் இந்த நட்சத்திரங்களிலும், செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களும் கட்டாயமாக சாந்தி (பரிகாரம்) செய்து கொள்ள வேண்டும் கிரகணம் விட்ட பிறகு சாப்பிடவேன்டும்.

Related Stories: