வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 31: திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்தல் முகாமை சேர்மன் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனிதா தெரசாள் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்தல் முகாம் சனி, ஞாயிறு என்று கடந்த 2 நாட்கள் நடைபெற்றது, திருத்துறைப்பூண்டி புனிதா தெரசாள் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமை நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: