வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழை அறுவடைக்கு காத்திருந்த 200 ஏக்கர் நெல் பாதிப்பு

வத்திராயிருப்பு, ஜன. 22: வத்திராயிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது. இதில் கோட்டையூா் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தனர். அதில் 200 ஏக்கர் வரை அறுவடைக்கு காத்திருந்தன. ஆனால், தொடர்மழையால் இந்த நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோட்டையூர் விவசாயி கண்ணன் கூறுகையில், கோட்டையூர் பகுதியில் 200 ஏக்கர் வரை நெல் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்கள் தொடர்மழையால் சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தோம். வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தும், தனியாரிடம் வட்டிக்கு வாங்கியும், விவசாயம் செய்தோம். ஆனால், தொடர்மழையால் முழுமையாக நெல் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. எனவே, பாதிப்படைந்த நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்

Related Stories:

>