திருப்புவனம், டிச. 30: திருப்புவனத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயிலில் திமுக மேற்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகங்களின் சார்பில் அன்னதானமும், மடப்புரம் பொதுமக்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கும் விழாவும் மாவட்ட திமுக துணை செயலளர் சேங்கைமாறன் தலைமையில் நேற்று நடந்தது.
விழாவில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் ரகுமத்துல்லாகான், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா, ஈஸ்வரன், வெங்கடேசன், மீனாட்சிசுந்தரம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், சங்கர், ஒன்றிய பொருளாளர் சக்தி முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் ரவி, மகேந்திரன், இளைஞர் அணி அறிவுக் கரசு, கண்ணன், காளிதாஸ், பிரபு, மாணவரணி பாண்டி கிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரிதாஸ், ராமலெட்சுமி பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
