விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.22: வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கோரி மதுரை மாவட்ட  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாகி பாண்டியம்மாள் தலைமையில், மதுரை மாநகர், மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>