சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

பென்னாகரம், டிச.27: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் அணிய போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பணிகள் டூவீலர் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், பென்னாகரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணி அறிவுறுத்தலின் பேரிலும், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி மேற்பார்வையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, எஸ்ஐ பரமேஸ்வரன் மற்றும் சிறப்பு எஸ்ஐ சோமு ஆகியோர் ஹெல்மெட் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது, சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: