திண்டுக்கல்லில் செல்லப்பிராணிகள் கண்காட்சி

திண்டுக்கல், டிச.25: திண்டுக்கல்லில் செயின்ட் ஜோசப் சிபிஎஸ்இ பள்ளியில், மாணவர்களிடையே கருணை, பொறுப்புணர்வு மற்றும் உயிரினங்களின் மீது அன்பை வளர்க்கும் நோக்கில் பள்ளி வளாகத்தில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பள்ளிக்கு அழைத்து வந்து கண்காட்சியில் இடம்பெற செய்தனர்.

கண்காட்சியில் ஷிஹ்சூ பப்பி, கோல்டன் ரெட்ரீவர், பக், சிப்பிப்பாறை, பொமரேனியன் உள்ளிட்ட நாய் வகைகள், பெர்சியன் பூனை, மெய்ன் கூன் பூனை, நாட்டு பூனைகள், முயல்கள், பறவைகள் உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகள் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

மாணவிகள் தங்களது செல்லப்பிராணிகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை பராமரிக்கும் முறை குறித்து பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பான மற்றும் கண்காணிக்கப்பட்ட சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 

Related Stories: