உயர் மின்கோபுரம் அமைக்க கோரி எம்பி.யிடம் எஸ்டிபிஐ மனு

திண்டுக்கல், டிச.25: திண்டுக்கல் வத்தலகுண்டு ரோடு ஏபிநகர், பிஸ்மி நகர் பிரிவில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வலியுறுத்தி எஸ்டிபிஐ சார்பில், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோட்டில் ஏபிநகர் மற்றும் பிஸ்மி நகர் பஸ் நிறுத்தத்தில் இரவு நேரத்தில் மிகுந்த இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த ரோட்டில் விபத்து ஏற்பட்டு வாலிபர் ஒருவர் மரணமடைந்து விட்டார். ஆகவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 

Related Stories: