கரூர், டிச. 24: ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியூ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, தொழிலாளர் நலச்சட்டத்தை நான்கு தொகுதிகளாக வெளியிட்டதை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியூ சார்பில் சிஐடியூ மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள காமராஜ் சிலை அருகே ஒன்று கூடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 50க்கும் மேற்பட்டோர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
