- பி.ஜே.பி கூட்டணி
- TTV
- ஆண்டிப்பட்டி
- AMMK
- பொதுச்செயலர்
- தின மலர்
- எம்.ஜி.ஆர்
- வைகை அணை சாலை
- ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுக. அமமுகவை முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தது உண்மை. தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்தநாள் முடிந்தப் பிறகு கூட்டணி முடிவுகளை அறிவிப்போம்.
வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி. நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும், ஆண்டிபட்டியில் அமமுகதான் போட்டியிட்டு வெற்றி பெறும். யார் போட்டியிடுகிறார் என்பதை முடிவு செய்யவில்லை. உடனே நீங்கள் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டு விடாதீர்கள். வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்போம். தேர்தல் கூட்டணியில் எங்களை ஏற்றுக் கொள்பவர்களை விட, நாங்கள் யாரை ஏற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்.
பிள்ளையார்பட்டி கோயிலுக்கு சென்றபோது, ஊடகத்துறை நண்பர்கள் சிலர், ‘உங்களுக்கு கூட்டணியில் 6 சீட் கொடுத்துள்ளார்களா?’ என்று கேட்டனர். அது வதந்தி, அதை நம்ப வேண்டாம் என்று நான் அன்றே சொன்னேன். ஆனால் வதந்திகளை தகவல் என்ற பெயரில், செய்தியாக்கும் போது வருத்தமாக இருக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
