×

சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் ஜி.கே.வாசன் பேச்சு

சென்னை: புளியந்தோப்பு தொன்போஸ்கோ கல்லூரி வளாகத்தில் த.மா.கா. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ தலைமை தாங்கினார். லூயிஸ் ராஜன், ஆர்.கே.நகர். மாரி, ராஜேஷ், பால்விலாத் முன்னிலை வகித்தனர். சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.

விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி, சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும். ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்காக வழங்கும் திட்டங் களை மாநில அரசுகள் முழு அளவில் முறையாக பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். மக்கள் மத வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது’’ என்றார்.

இதை தொடர்ந்து 700 பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பாத்திரம், புடவை, லஞ்ச் பாக்ஸ் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 400 மாணவர்களுக்கு விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களையும் அவர் வழங்கினார். பாதிரியார்கள் ஜாய் குரியன், மெல்வின்ராய், நூர்து ஜார்ஜ், ஜான் கிறிஸ்டி, ஸ்டாலின், ராணி பிரகாஷ் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்கள்.

விழாவில் மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஜவஹர் பாபு, திருவேங்கடம் ராணி கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் பால சந்தானம், கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஆர்.டி.. ரமேஷ், ஆர்.எஸ்.முத்து, சைதை மனோகரன், நைனார் ராவுத்தர், எல்.கே.வெங்கட், சைதை நாகராஜ், மாவட்ட தலைவர்கள் கே.பி. லூயிஸ், தி.நகர் கோதண்டன், கோவிந்தசாமி துறைமுகம் செல்வக்குமார், பொன் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : G.K. Vasan ,Christmas festival ,Chennai ,Christmas ,TMC ,Pulianthope Don Bosco College ,North Chennai ,East ,District ,President ,Biju Sacco ,Louis Rajan ,R.K. Nagar ,Mari ,Rajesh ,Paul Vilath ,Peacock… ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு