×

விவசாயிகளுக்கான குரலை ஒன்றிய பாஜ ஆட்சியாளர்கள் உணர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: இந்திய விவசாயிகளுக்கான குரலை ஒன்றிய பாஜ ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை மேடவாக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள்.

இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பாஜ ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்.

Tags : Union BJP ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Union BJP government ,Gandhiji ,AIADMK ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு