பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி, டிச.25: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் (பொ) செல்வ பாண்டியன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலைப் மாணவர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மாதையன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரவி, பச்சாகவுண்டர், சம்பத், ராஜாமணி, மாது, செந்தில், வைகுந்தன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: