×

ரூ.4.38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி, டிச.24: போச்சம்பள்ளி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் ரூ.4.38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 44 விவசாயிகள் 2,916 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் கொப்பரை கிலோ அதிகபட்சம் ரூ.190க்கும், குறைந்தபட்சமாக ரூ.60.99க்கும், சராசரி விலையாக ரூ.175.69க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 2,916 கிலோ கொப்பரை ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 598க்கும் விற்பனை ஆனாது. கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை விவசயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் தெரிவித்தார்.

Tags : Copra ,Pochampally ,e-NAM ,Pochampally Agricultural Regulatory Sales Hall ,Pochampally Regulatory Sales ,Hall ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்