×

2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்

கெங்கவல்லி, டிச.25: வீரகனூர் அடுத்த திட்டச்சேரி அருகே வசிக்கும் துரைசாமி மகன் சதீஷ்குமார்(32). இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி சதீஷ்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால், வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். அதேபோல், கிழக்கு ராஜாபாளையம் நத்தக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(40). இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 23ம் தேதி ரமேஷ் வீரகனூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது, வீட்டில் இருந்த மனைவி, மகள்களை காணவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து ரமேஷ் புகார் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kengavalli ,Satishkumar ,Duraisamy ,Thittacheri ,Veeraganur ,Keerthana ,
× RELATED வாலிபரை தாக்கிய ரவுடி உள்பட 4 பேர் கைது