×

பொங்கல் பரிசு தருவதாக கூறி 2000 பேரிடம் பணம் வசூல்

வாழப்பாடி, டிச.23: வாழப்பாடியில் பொங்கல் பரிசு தருவதாக கூறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிற்சங்க உறுப்பினர்களிடம், பணம் வசூல் செய்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் மூலமாக கட்டுமான தொழிற்சங்க உறுப்பினர்களிடம் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு, பொங்கல் பரிசு தருவதாக கூறி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் டோக்கன் வழங்கி ரூ.100 முதல் ரூ.200 வரை வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, சொக்கலிங்கம், சித்தனுர் ஆறுமுகம், ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், வாழப்பாடியில் வசூல் செய்த பாஸ்கர், கருப்பையா ஆகிய 2 ேபரை அழைத்து விசாரித்தனர். அப்போது, வசூல் செய்த தொகையை அவர்களிடம் வழங்கி விட்டு, அந்த அட்டைகளை ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, கையெழுத்து பெற்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என கூறியதன் பேரில் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vazhappadi ,Vazhappadi, Salem district ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து