இளம்பிள்ளை, டிச. 23: சேலம் மேற்கு மாவட்டம், இடங்கணசாலை நகர திமுக அவசர செயற்குழு கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வரைவு வாக்காளர் பட்டியல் பிரதிகள் வார்டு செயலாளர்கள், பிஎல்ஏ2 மற்றும் பிஎல்சி முகவர்களிடம் வழங்கப்பட்டது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரங்களை கவனத்துடன் சரி பார்த்து, கட்சியினர் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு குடும்ப வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து, இடம் பெறவில்லை என்றால் உடனடியாக படிவம் 6 பூர்த்தி செய்து அவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் தளபதி, நகர துணை செயலாளர்கள் குமார், கோமதி மணிகண்டன், பொருளாளர் சிவகுமார், ரமணி மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
