- சேலம்
- நரசிம்மன்
- சூர்யா (எ) சஞ்சய்
- செல்லக்கண்ணு
- கோகுல்
- முனியப்பன் கோயில் சாலை
- பள்ளபட்டி, சேலம்
- அருணாசலம்
- வடிவேல்…
சேலம், டிச.24: சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர்கள் நரசிம்மன், சூர்யா(எ)சஞ்சய், செல்லக்கண்ணு, கோகுல். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருணாச்சலத்தை தாக்கினர். இவரது உறவினரான வடிவேல் என்பவரையும் மறுநாள் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வடிவேல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நரசிம்மன்(22), சூர்யா(24), ரவுடி ஈஸ்வரன்(25), செல்லகண்ணு(27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
