தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்: டி.டி.வி. தினகரன் விளக்கம்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார். கூட்டணியே அமையாதபோது எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறுவது அபத்தம். தமிழ்நாட்டில் தவிர்க்கமுடியாத இயக்கமாக அமமுக உள்ளது. விலை போகாத நிர்வாகிகள் எங்களுடன் இருக்கின்றனர். அமமுகவை தவிர்த்து விட்டு யாராலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஜெயலலிதாவுக்கு உறவுகள் இல்லாதபோது குடும்ப நண்பர்களாக நாங்கள் நின்றோம் என தெரிவித்தார்.

Related Stories: