வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

தினசரி செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக சமீப நாட்களில் இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து ஐ.நா.வின் நிலைப்பாடு என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, அந்நாட்டின் நிலைமை குறித்து ஐ.நா. மிகவும் கவலைப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் போலவே, பெரும்பான்மை சமூகத்தைச் சாராத மக்களும் பாதுகாப்பாக உணர வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அத்தியாவசியமானது. ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசாங்கம் எடுக்கும் என்று ஐ.நா. எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related Stories: